சரி நாமலும் தமிழில் ஒரு கதை போட்டா என்ன அப்படினு ஒரு யோசனை
இதோ உங்களின் பாசமிகு அபர்ணாவின் சைக்கிள் பயணம்.
சின்ன வயசுல சைகிள் ஓட்டனும்னு கொல்ல பிரியம். அப்பா கிட்ட கேட்டேன்.. ஒத விழும் சொலிட்டாரு.சரினு மனச தேத்திட்டு. வெளிய வந்தேன் அப்பா வோட சைகிள் இருந்தது. அதுவும் பெரிசு பார் வைச்சது.சரி ஒன்னும் இல்லாததுக்கு ஒரு பொன்னாம்னு அந்த சைக்கிள ஒட்ட அரம்பிச்சேன்
சும்மா சுப்பரா ஒட்டினேன். இந்த சைக்கிள் ஒட்டறத்துக்கே டியுசன் எல்லாம் ஒழுங்கா போனேன்.என்னோட பயணத்தை விட்டிலிருந்து காலை 6.30 மணிக்கே கிளம்பிடுவேன். வெளிய சொன்னா வெக்ககேடு, பரவாயில்ல இருந்தாலும் சொல்லறென். டியுசன் என்னவொ
7 மணிக்குதான் அதுவும் விட்டுலேந்து 5நிமிஷம் நடந்தா, ஆனா நான் சைக்கிள் மீது காதல் கொண்டு அதுலதான் போனேன்.
அப்படி ஒரு நாள் ஸ்குல்ல ஃபயை வைச்சுட்டு சைக்கிள்ள வரும் போது சாமி சிலையை பார்த்துட்டு ஒரு ஆர்வத்துல ரெண்டு கையலயும்கும்பிடு போட்டேன், அப்போ எனொட நிலைமையை யோசிச்சு பாருங்க..சேம அடி.. இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது.....
அய்யொ அய்யொ ஒரே காமடி போங்க!!!!!!!!!
P.S: cross posted in infy blog when i was working